6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்க்கு நிவாரண உதவிகளை சபாநாயகரின் சார்பாக வழங்கிய அவரது மகன் !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கோவை மாவட்டம் அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் அவர்களின் மகனும்,தகவல் தொழில்நுட்ப பிரிவின் கொங்கு மண்டல பொறுப்பாளருமான லோகேஷ் தமிழ்ச்செல்வன் இன்று நிவாரண உதவிகளை வழங்கினார்.

இதில் அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடக்கலூர்,கணுவக்கரை,பசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு அரிசி,காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அன்னூர் ஒன்றிய கழகச்செயலாளர் அம்பாள் பழனிசாமி, அன்னூர் ஒன்றியக்கழக துணைச் செயலாளர் சாய் செந்தில்,தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணை செயலாளர் பிரபு, அன்னூர் ஒன்றிய முன்னாள் துணைச் சேர்மன் சரவணன்,ஊராட்சி மன்ற தலைவர் வெங்கிடுபதி,கூட்டுறவு சங்க தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply