வியாழன் கிரகத்தின் புதிய ஒளிரும் புகைப்படம் !

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


வியாழன் கிரகத்தின் புதிய படம் ஒன்றை வானியல் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். மேக கூட்டங்களுக்கு அப்பால் இருளில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் அந்த கிரகத்தில் உள்ள ஒளிரும் பகுதிகள் நெருப்பு வளையங்கள் போன்ற தென்படுவதை முதன்முதலாக படம் பிடித்த விஞ்ஞானிகள் இதனை அதிர்ஷ்டவசமான படம் என்று வர்ணித்துள்ளனர்.

 

இந்தப்படம் ஹவாய் தீவிலுள்ள ஜெமினி தொலைநோக்கி மூலமாக அகச்சிவப்பு அலைகளை உருவாக்கி எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியான ஹப்பிள் மூலம் எடுக்கப்பட்ட படத்தில் சிவப்பாக காணப்பட்டவை மலைகள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது சிவப்பு நிறம் கொண்டவை ஒளிரும் பகுதி என்பது தெரியவந்துள்ளது.


Leave a Reply