மகாராஷ்டிராவில் 714 போலீசாருக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


மகாராஷ்டிராவில் 714 பேருக்கு இதுவரை கொரொனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் 5 போலீசார் மரணமடைந்து விட்டதாகவும் அந்த மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் 714 போலீசாரில் 81 பேர் அதிகாரிகள் எனவும் 633 பேர் காவலர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. 714 போலீசார் 5 பேரை மரணம் அடைந்துவிட்ட நிலையில் 648 பேர் சிகிச்சை பெறுவதாகவும், மேலும் 61 பேர் குணமடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

 

ஊரடங்கு காலத்தில் காவல்துறையினர் மீது 194 தாக்குதல் சம்பவங்கள் நடந்ததாகவும் இதில் 73 போலீசார் உட்பட 74 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறிய மஹாராஷ்டிரா காவல்துறை விசாரணை தொடர்பாக 689 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஊரடங்கை மீறிய வாகன ஓட்டிகளிடம் 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Leave a Reply