இஞ்சி இடுப்பழகி பாடலுக்கு நடனமாடிய டேவிட் வார்னர்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தனது மனைவி, மகளுடன் சேர்ந்து தேவர்மகன் படப் பாடலான இஞ்சி இடுப்பழகி பாடலுக்கு நடனமாடி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் கிரிக்கெட் விளையாடமல் வீட்டிலேயே டேவிட் வார்னர் ஓய்வெடுத்து வருகிறார்.

 

இதனால் டிக் டாக் செயலியில் மனைவி, மகளுடன் சேர்ந்து நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக தமிழில் இசையமைப்பாளர் இளையராஜா இசையில் நடிகர் கமலஹாசன் நடிகை ரேவதி, நடித்த இஞ்சி இடுப்பழகி பாடலுக்கு மனைவி, மகள் ஆகியோருடன் நடனமாடி டிக்டாக் வீடியோ வெளியிட்டுள்ளார்.


Leave a Reply