கோவையில் தங்கி பணிபுரிந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சுமார் 1140 பேர் சிறப்பு ரயில் மூலம் பீகாருக்கு அனுப்பி வைப்பு !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கொரோனா தொற்றால் தொழில்கள் யாவும் முடங்கியுள்ள சூழலில் வேலை இல்லாமலும் ,சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும் தவித்து வந்த வட மாநில தொழிலாளர்களை அந்தந்த ஊருக்கு அனுப்பும் பணியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது.அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு ,பொள்ளாச்சி ,பேரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்கி பணிபுரிந்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சுமார் 1140 பேரைக் கோவை மாவட்ட நிர்வாகம் தனது சொந்த செலவில் சிறப்பு ரயில் மூலம் டிக்கெட் எடுத்து கொடுத்து, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

காவலர்கள் உதவியோடு ரயில் நிலையம் அழைத்து வந்து உடல் வெப்பநிலையைக் பரிசோதனை செய்து,
22 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயிலில் தனி மனித இடைவேளியுடன் அமர வைத்து, உணவு ,தண்ணீர்,முகக்கவசம் உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர்.

சரியாக 8 மணியளவில் கோவை ரயில் நிலையத்திலிருந்து பீகாருக்கு கிளம்பிய சிறப்பு ரயில் வருகின்ற 10 ஆம் தேதி காலை பீகார் சென்றடையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply