--- --:--:-- --

கொரோனாவை ஓட, ஓட துரத்திய தூத்துக்குடி..! எப்படி நடந்தது மேஜிக்..?

corona122-1582083604

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி தற்போது மாறியுள்ளது.

 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் 27 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 25 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஒருவர் இறந்து உள்ளார். ஒருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவரும் இன்று வீடு திரும்பினார்.

 


தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடைசி பெண்ணும் மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டார். கொரோனா இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி தற்போது மாறியுள்ளது.

 

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட மாநிலங்களின் பட்டியலில் ஈரோட்டை தொடர்ந்து தூத்துக்குடி சேர்ந்துள்ளது. தூத்துக்குடியில் ஊரடங்கு தளர்வு வந்தாலும், மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

 

கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்புதல் போன்றவற்றை தவிர்த்து சுகாதாரத்தை பேண வேண்டும். அப்போதுதான் நோய் மீண்டும் பரவாமல் தடுக்க முடியும் என பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon