சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.192 குறைப்பு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சென்னையில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இந்த மாதத்தில் 192 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மூன்று மாதங்களில் 311 ரூபாய் 50 காசு குறைந்துள்ளது.

 

மானியம் இல்லாத சிலிண்டரின் விலை மே மாதத்தில் 192 ரூபாய் குறைக்கப்பட்டு ஒரு சிலிண்டரின் விலை 569 ரூபாய் 50 காசாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவே முந்தைய ஏப்ரல் மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 761 ரூபாய் 50 காசாக விற்பனை செய்யப்பட்டது.

 

இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடந்த மூன்று மாதங்களில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 311 ரூபாய் 50 காசு விலை குறைந்துள்ளது. இதற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி காரணமாக கூறப்படுகிறது.


Leave a Reply