திருமுருகன்பூண்டி 7 வது வார்டு தி.மு.க மற்றும் இளைஞரணி சார்பில் ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பில், 600 குடும்பங்களுக்கு அரிசி வழங்கப்பட்டது

Publish by: சஃபியுல்லா --- Photo :


தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடைகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வேலைக்கு செல்லமுடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

 

இதை கருத்தில்கொண்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தி.மு.க வினர் அப்பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்க உத்தரவிட்டார்.

 

இதைத்தொடர்ந்து திருமுருகன்பூண்டி தி.மு.க இளைஞரணி மற்றும் 7 வது மாவட்ட நிர்வாகிகள் சார்பில் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் நா. குமார் மேற்பார்வையில் திருமுருகன்பூண்டி பேரூர் கழக நகர துணைச் செயலாளர் மூர்த்தி முன்னிலையில் திருமுருகன்பூண்டி 7 வார்டுக்குட்பட்ட நெசவாளர் காலனி விரிவு, நெசவாளர் காலனி குடியிருப்பு பகுதிகள், ஜீவா வீதி ,சன்னதி வீதி, இ.பி லைன் வீதி, புற்றுக்கண் தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 600 குடும்பங்களுக்கு 1 இலட்சத்து 4 ஆயிரம் மதிப்பிலான அரிசி பைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் டி.கே. சண்முகம், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர திருமுருகன், சிற்பி. ரமேஷ், ஒன்றிய பிரதிநிதி இராமநாதன், பூண்டி 4 வது வார்டு செயலாளர் யுவராஜ், மாவட்ட பிரதிநிதி வெங்கடாசலம், கழக நிர்வாகிகள் ராமு, வடிவேல், பிரசன்னா, திருநாவுக்கரசு, கண்ணன், வக்கீல் சண்முகம், மனோகரன், நெல்லையப்பன், டெல்லி முத்து பூபாலன்* இளைஞரணி நிர்வாகிகள் வினோத்குமார், லிங்கேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ்குமார், ரமேஷ், கவின், ஜெகதீஸ்வரன், மணி, கார்த்தி, நந்தகுமார், நிவாஸ், மணிகண்டன், இளங்கோ, யோகேஸ்வரன், சரண், சம்பத், விக்னேஷ், விக்கி, உஸ்மான் , ரகுபதி, காளீஸ்வரன், சச்சின், சபி, கறிக்கடை பிரபு, தாமோதரன், அரவிந்த், திருப்பதி, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Leave a Reply