காவிரி மேலாண்மை விவகாரத்தில் பொதுப்பணித்துறை விளக்கம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


காவிரி நீர் வேளாண்மை ஆணையம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழுவின் அதிகாரங்களில் எந்த மாற்றமும் இல்லை என தமிழக பொதுப்பணித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து பொதுப்பணித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மத்திய அரசின் நீர்வள ஆதாரம், நதி நீர் மேம்பாடு, கங்கை புனரமைப்பு அமைச்சகம் மற்றும் துப்புரவு அமைச்சகம் ஆகிய இரண்டையும் இணைத்து புதிதாக ஜல்சக்தி அமைச்சகத்தை உருவாக்கி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

 

மத்திய அரசு ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கீடு செய்துள்ள பெரும்பான்மைகள் குறித்து உள்ள விதிகளுக்கு திருத்தங்களை மேற்கொண்டு உள்ளது. இதில் ஜல்சக்தி அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டும், அமைச்சகத்தால் கையாளக்கூடிய பல பொருண்மைகளும் கொண்டுவரப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதில் கோதாவரி, கிருஷ்ணா வாரியமும் உச்சநீதிமன்ற ஆணைப்படி ஏற்படுத்தப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் மற்றும் இதர நிர்வாகங்களை மேற்கொள்வதற்கான ஒரு வழக்கமான நிர்வாக நடைமுறை என்றும், இதனால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் நடவடிக்கைகள் மற்றும் அதிகாரங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனவே காவிரி நதி நீரை நம்பி இருக்கும் விவசாயிகள் நலன்களுக்கு இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.


Leave a Reply