கரூரில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 95 வயது மூதாட்டி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 95 வயது மூதாட்டி கொரொனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளூரில் இருந்து மட்டுமல்லாமல் திண்டுக்கல், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 20 பேர் கொரொனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இதில் திண்டுக்கல்லை சேர்ந்த 95 வயது மூதாட்டி ஒருவர் கொரொனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கரூர் மருத்துவமனை டீன். ரோஸி வெண்ணிலா உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மூதாட்டிக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். மேலும் 4 பேர் கொரொனாவில் இருந்து குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Leave a Reply