வானத்தில் பறக்கும் தட்டுகள் வந்தது உண்மைதான்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


அமெரிக்க வான் வெளியில் பறந்து சென்ற பொருட்கள் யுஎஃப்ஒ எனப்படும் அடையாளம் காண இயலாத பறக்கும் பொருட்கள் தான் என்று அமெரிக்க கடற்படை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. வானில் மின்னல் வேகத்தில் பறந்து மறைந்த பொருட்கள் பாதுகாப்பு ரீதியில் ஆபத்தானவை அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பொதுவெளியில் உலா வந்த இந்த படங்கள் குறித்த தவறான கருத்துக்களைக் கலையவும் உண்மைத்தன்மையை மக்களுக்கு தெரிய படுத்தவும் இந்த விளக்கம் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படை வெளியிட்டுள்ள இந்த மூன்று வீடியோ படங்களுமே 2017, 2018 ஆண்டுகளில் தனியார் நிறுவனம் ஒன்றால் வெளியிடப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தன. இதுகுறித்து பலவாறான யூகங்கள் வெளிவந்த நிலையில் அமெரிக்க கடற்படை விளக்கமளித்துள்ளது.


Leave a Reply