புதுக்கோட்டை பொன்னமராவதி காரையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா வைரஸ் சிறப்பு பரிசோதனை அறை திறப்பு
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா காரையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில்
கொரோனா வைரஸ் தடுப்பு தீவிர நடவடிக்கையாக கொரோனா வைரஸ் சிறப்பு பரிசோதனை அறை திறக்கப்பட்டன.
புதுக்கோட்டை சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரின் அறிவுறுத்தலின் படி கொரோனா வைரஸ் சிறப்பு பரிசோதனை அறை துவங்கப்பட்டுள்ளது. இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் கூறுகையில் சாதாரண நோயாளியை பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் போது அவர்களிடமிருந்து வெளிப்படும் வாய், மூக்கு நீர்த்திவகைகள் எதிரே பரிசோதிப்போர் மீது படுவதோடு் பிற இடங்களிலும் நோய் தொற்று பரவக்கூடும் என்பதால் இச்சிறப்பு பரிசோதனை அறை அமைக்கப்படுள்ளதென்றும் கோவிட்-19 பரிசோதனை அறையில் நோயாளி என சந்தேகிப்போரை சிறப்பு பரிசோதனை செயல்படும் என்றும் பரிசோதனைக்கு பின் கிருமி நாசி மூலம் சுத்தம் செய்யப்படும் என்றும் மருத்துவர் அருள்மணி நாகராஜன் தெரிவித்தார்.
மேலும் இப்பரிசோதனை அறைக்கு உள்ளே செல்லும் வழி, வெளியே செல்லும் வழி என 2 வழிகளில் உள்ளதென்றும் இவ்வழியை பயன்படுத்தும் முன் 30-வினாடிகள் கை-களை சோப்பு கொண்டு சுத்தம் செய்த பின்ரே அனுமதிக்க படுவார்கள் என்றும் கூறினர்.
இச்சிறப்பு பரிசோதனை நிலையத்தில் இன்புளூயேன்சா,ஜுரம், தொடர் சளி,காய்ச்சல் உள்ளோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






