சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் உட்பட மனைவி, மகன், மகளுக்கு கொரொனா பாதிப்பு உறுதி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சென்னை மந்தைவெளியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினரும் மூன்று பேருக்கு சளி, இருமல், மற்றும் லேசான காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. இந்த நிலையில் நான்கு பேரும் தனியார் பரிசோதனை மையத்தில் மாதிரிகளை கொடுத்திருந்தனர்.

 

அதன் முடிவில் கணவன், மனைவி, மகன், மகள் ஆகிய நால்வருக்கும் கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களது வீட்டிற்கு வந்திருந்த உறவினரையும் மாநகராட்சி அதிகாரிகள் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்தவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Leave a Reply