தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்காக தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கிய காவலரை பாராட்டி, வெகுமதி வழங்கிய ஐ.ஜி !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


தமிழத்தில் மிக அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 2058 ஆக உயர்ந்துள்ளது. இதனால் சாலை ஓரங்களில் வசிப்போர்,ஆதரவற்றோர் உண்ண உணவின்றி தவித்து வந்தனர்.

 

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளுக்காக தமிழக அரசு சார்பில் முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதியினை வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனையடுத்து தொழிலதிபர்களும்,தன்னார்வலர்களும்,மாணவர்களும் தாமாக முன்வந்து தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியினை அளித்து வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக கோவை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் முதல்நிலைக்காவலர் பாபு தனது ஒரு மாத (மார்ச் 2020) ஊதியத்தை (ரூபாய் 25,788/-) கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்காக வழங்கினார்.

 

இதனையறிந்த மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா இன்று கோவிட்19 பரவலை தடுப்பதற்காக தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத (மார்ச் 2020) சம்பளத்தை (ரூபாய் 25,788/-) வழங்கிய கோவை மாவட்ட ஆயுதப்படை முதல்நிலைக்காவலர் பாபு என்பவரை அழைத்து அவரது நற்செயலை பாராட்டி வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

அப்போது,கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் கார்த்திகேயன் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.


Leave a Reply