ரேபிட் கருவிகளை திருப்பி அனுப்புங்க..! ஐசிஎம்ஆர் அதிரடி
கொரோனா வைரஸ் சோதனைக்காக இரு சீன நிறுவனங்களிடமிருந்து வாங்கிய ரேபிட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் உத்தரவிட்டுள்ளது.
சீனாவிடம் இருந்து வாங்கிய கொரோனா ஆய்வு கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டு, அதனை உடனடியாக கண்டறிய சீனாவின் 2 நிறுவனங்களிடம் இருந்து பரிசோதனை கருவிகளை இந்தியா வாங்கியது.
ஆனால் அவை சரியாக செயல்படவில்லை, துல்லியம் இல்லை என்று ராஜஸ்தான் ஐசிஎம்ஆருக்கு புகார் அனுப்பியது. இதையடுத்து கருவிகளின் தரம் பற்றி அறிய மூன்று மாநிலங்களுடன் ஐசிஎம்ஆர் ஆலோசனை நடத்தியது.
முடிவில் அடுத்த 2 நாட்களுக்கு விரைவு பரிசோதனை கருவிகளை சோதனைக்கு பயன்படுத்த வேண்டாம் என்று மாநில அரசிடம் கடந்த 22ம் தேதி அறிவுறுத்தியது.
இந்நிலையில் சீனாவிடம் இருந்து வாங்கிய பரிசோதனை கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரிசோதனைக்காக இரு சீன நிறுவனங்களிடம் வாங்கிய ரேபிட் கருவிகளை திருப்பியளிக்க மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் உத்தரவிட்டுள்ளது.






