சலூன் கடைகள் மற்றும் கழிப்பறைகள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கழிவறைகள் மற்றும் சலூன் கடைகள் மூலமாக தொற்று பரவும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. நூறா, ஆயிரமா மொத்தம் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கி இருக்கும் கொரொனா வைரஸ் உலக நாடுகளை திணற வைத்துக் கொண்டுள்ளது. இந்த தொற்றின் தீவிரம் அதிகரித்தது முதலே அதனை கட்டுப்படுத்த சர்வதேச அளவில் மருத்துவ ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

 

முதன்முதலில் பாதிப்புக்குள்ளான சீனா, கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நோய்த் தொற்றுக்கான சிலர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். காய்ச்சல், வறட்டு இருமல், சளி போன்றவை மட்டுமே ஒரு நோயின் அறிகுறியாக இதுவரை கூறப்பட்டு வந்தது. ஆனால் மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு நோய் பாதித்த சில நாட்களில் வயிற்றுப்போக்கு பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது.

 

நோய் பாதிப்புக்கு ஆளானவர்களில் கழிவுகளை சோதனை செய்தபோது அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. அதனால் தொற்று அறிகுறிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் மூலமாகவோ அல்லது பொது கழிப்பறைகள் மூலமாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவ வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

 

இப்படியான தகவல்கள் ஒருபுறம் என்றால் மறுபுறம் சலூன் கடை ஒன்றின் மூலமாக பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தான் அந்த சலூன் கடை அமைந்துள்ளது. ஏப்ரல் ஐந்தாம் தேதி அங்கு சிகை அலங்காரம் செய்து கொள்ள சென்ற ஒருவருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த சலூன் கடை மூலமாக கிராம மக்கள் பலருக்கு நோய்த்தொற்று பரவியது கண்டறியப்பட்டுள்ளது.

 

சுகாதாரத்துறை அதிகாரிகள் இது குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கும் நிலையில் மக்கள் தங்களின் சுய பாதுகாப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை அதிகரித்துள்ளது.


Leave a Reply