இடர்படி வழங்கக்கோரி காந்திபுரம் பேருந்து நிலைய வளாகத்தில் கோரிக்கை அட்டைகளை கையில் ஏந்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தமிழக அரசு இடர்படி வழங்கி வருகின்றது. கோவையில் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கும் இடர்படி
வழங்க வேண்டும் என தூய்மை பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளி விட்டு கோரிக்கை அட்டைகளை கையில் ஏந்தியபடி தூய்மை பணியாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர். அப்போது, ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் எனவும், அரசு பணியாளர்களுக்கு இடர்படி வழங்கப்படுவதை போல,தூய்மை பணியாளர்களுக்கும் இடர்படி வழங்கப்பட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் வலியுறுத்தினர்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி காவல்,மருத்துவம்,தீயணைப்புத்துறைகளுக்கு இடர்படி உண்டு.தூய்மைப்பணியாளர்களுக்கு இடர்படி வழங்கப்படவில்லை.உடனடியாக வழங்குக என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய கோரிக்கை அட்டைகளை ஏந்திய படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.தூய்மைப்பணியாளர்களின் இப்போரோட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Leave a Reply