நாளை ஊரடங்கு தளர்த்தப்படுகிறதா…? முதலமைச்சர் முக்கிய முடிவு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புப்படம்


டெல்லி: தலைநகர் டெல்லியில் மே 3ம் தேதி வரை கட்டுப்பாடுகள் தொடரும் என்று அம்மாநில முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லியும் ஒன்று. இந்த மாநிலம் 3வது இடத்தில் இருக்கிறது. இதுவரை 2,625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: கொரோனா தொற்று இல்லாத பகுதிகளில் தளர்வுகளை அனுமதிக்கலாம் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.

 

ஆனாலும் டெல்லியில் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளோம். இது குறித்து நாளை மறுபரிசீலனை செய்து முடிவெடுப்போம்.

 

தற்போது, மத்திய அரசின் சமீபத்திய வழிகாட்டுதல்களுடன் டெல்லி இணைந்துள்ளது. சந்தைகள், வணிக வளாகங்கள் என எதுவும் திறக்கப்படாது.
கட்டுப்பாட்டு மண்டலங்களில் தற்போதைய நடைமுறையே பின்பற்றப்படும். குடியிருப்பு பகுதிகளில் மட்டும் சில கடைகள் திறக்கப்படும். இந்த கட்டுப்பாடுகள் மே 3ம் தேதி வரை தொடரும் என்றார்.

 


Leave a Reply