உத்தவ் தாக்கரே வீட்டில் பணியாற்றிய காவலருக்கு கொரோனா!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


மகாராஷ்டிராவில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் அலுவலகத்தில் இல்லத்தில் பணியாற்றிய காவலருக்கு கோரோன பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்தியாவிலேயே கொரொனா தொற்று பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரொனா வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

 

இதனையடுத்து மகாராஷ்டிராவில் கொரொனா தடுப்பு நடவடிக்கைகளில் அந்த மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் மும்பையில் மலபார் ஹில் பகுதியில் உள்ள புத்தகத்தை அலுவலகமான வார்சாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி காவல் ஆய்வாளர் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவருடன் தொடர்புடைய அனைவரையும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக மும்பை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

நாடு முழுவதும் கொரொனா தொற்று கண்டறிய பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. 640 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3,870 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 5 ஆயிரத்து இருநூற்று அதிகமானோருக்கு கொரொனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் நோய்த்தொற்றின் காரணமாக 76 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

148 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். குஜராத்தில் நோய் பரவல் அதிகரித்துள்ளது. அங்கு 2,170 க்கும் அதிகமானோர்க்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 90 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 139 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில் 2,156 பேரும் ராஜஸ்தானில் ஆயிரத்து 650 பேரும் தமிழகத்தில் ஆயிரத்து 596 பேரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


Leave a Reply