69 சதவீதம் பேருக்கு கொரொனா அறிகுறியே இல்லாமல் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா உறுதி செய்யப்பட்டவர்களில் 69 சதவீதம் பேருக்கு அதற்கான அறிகுறியே தெரியவில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுவரை சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமானோரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் தலைவர் டாக்டர் கங்கா 31 சதவீதம் பேருக்கு மட்டும்தான் அறிகுறிகள் தெளிவாக தெரிந்தன மற்ற 69 சதவீதம் பேருக்கு அறிகுறிகளை தெரியாமல் இருந்தன என்று தெரிவித்துள்ளார்.

 

கொரொனா என்ற புதிய தொற்று நோய் பரவிய சில மாதங்களில் ஒன்றரை லட்சம் பேரின் உயிரை பறித்துக் கொண்டது. பல லட்சம் பேரை பாதிப்புக்கு ஆளாகி உள்ளது. உலகநாடுகளின் பொருளாதாரத்தை உருக்குலைத்து விட்ட நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரம் அடைந்துள்ளன.

 

இதுதொடர்பான தகவலை உலக சுகாதார அமைப்பும், அமெரிக்க தேசிய மருத்துவ உலகமும் கண்காணித்து வருகின்றன. தினம் தினம் புதிய கண்டுபிடிப்புகள் சிறிது அளவிற்கு நம்பிக்கை அளித்தாலும் ஆதாரப்பூர்வமான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தியாவும், ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இணைந்து மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.


Leave a Reply