மத்திய குழு வருகைக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா எதிர்ப்பு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


மேற்கு வங்க மாநிலத்திற்கு மத்திய குழுவை அனுப்பும் முடிவுக்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 

கொரொனா வைரஸ் பரவல் குறித்தும் ஊரடங்கு விதி மீறல்கள் குறித்தும் எடுக்கப்படும் மருத்துவ நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்ய கொரொனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளை கொண்ட மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய குழுவை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் கொரொனா தொற்றுக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை எதிர்ப்பதாகவும் ஆனால் மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் மத்திய குழுவை அனுப்ப மத்திய அரசு எடுத்த முடிவை புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.

 

மேற்கு வங்கத்தின் குறிப்பிட்ட மாவட்டங்களை மட்டும் தேர்ந்தெடுப்பதற்கு காரணம் என்ன என்பதை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவுபடுத்த வேண்டும் என கூறியுள்ள மம்தா பானர்ஜி, தெளிவான காரணமில்லாமல் மத்திய அரசின் குழுவை மாநிலத்திற்குள் அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply