--- --:--:-- --

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கொரொனா தொற்று!

3

கொரொனா வைரஸை தொடக்கத்திலேயே கட்டுக்குள் கொண்டு வந்ததாக பாராட்டப்பட்ட நாடு சிங்கப்பூர். ஆனால் தற்போது தெற்காசிய நாடுகளிலேயே அதிக வைரஸ் தொற்றுள்ள நாடாக சிங்கப்பூர் மாறியுள்ளது. 700 சதுர கிலோமீட்டர் பரப்பளவு டன் 57 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட சிறிய நாடு. இங்கு ஜனவரி 23ஆம் தேதி முதல் கொரொனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

 

உடனே விழித்துக் கொண்ட அரசு நாடு தழுவிய அளவில் பரிசோதனை மையங்களை உருவாக்கியது. 2 விமான நிலையங்களிலும் பயணிகள் முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். சிங்கப்பூர் தனது எல்லையை மலேசியாவுடன் மட்டுமே பகிர்வதால் எல்லை வெளியே வருபவர்களை கண்காணிப்பதும் எளிதாக இருந்தது. சிறந்த சுகாதார கட்டமைப்பு கொண்ட நாடு என்பதால் பாதிக்கபட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்தது.

 

ஊரடங்கு உள்ளிட்ட எந்த நடவடிக்கைகளும் எடுக்காமலேயே கொரொனாவை கட்டுக்குள் கொண்டுவந்தது சிங்கப்பூர். ஆனால் தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே அதிக தொற்று உள்ள நாடாக சிங்கப்பூர் மாறிவிட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் காட்டுத்தீ போல வைரஸ் பரவுவதை இதற்கு காரணம். அவர்களில் 90 சதவீதம் பேர் வெளிநாட்டவர்கள்.

 

இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சிங்கப்பூரில் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளே சிங்கப்பூரின் கரோனா வைரஸ் மையங்களாக மாறியுள்ளன. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசு எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை. அவர்களின் வாழ்க்கை நிலை மிக மோசமாக உள்ளது என பல ஆண்டுகளாக சிங்கப்பூர் அரசு மீது குற்றச்சாட்டு உள்ளது.

 

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கும் விடுதிகளின் நிலையே இந்த குற்றச்சாட்டுகளுக்கு சான்று. சிறிய அறைகளில் 12 பேர் வரை தங்கி இருக்கிறார்கள். தற்போது பிழைக்க வந்த இடத்தில் நோய் தொற்றுக்கு ஆளாகி செய்வதறியாது திகைக்கின்றனர். அண்மையில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களிடம் இருந்து இவர்களுக்கு வைரஸ் பரவியதா அல்லது பணியிடங்களில் பரவி அதன் மூலம் விடுதிகளில் உள்ள மற்றவர்களுக்கு தொற்று ஏற்பட்டதா என்பதை அரசு ஆய்வு செய்து வருகிறது.

 

பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களோடு தங்கியிருந்தவர்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் கொரொனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வர வர பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. சிங்கப்பூரின் சிறிய கவனச்சிதறல் மிகப் பெரிய பாதிப்பில் கொண்டு போய் விட்டதாக கூறும் வல்லுனர்கள் உலக நாடுகள் மிக மிக கவனத்துடன் செயல்பட வேண்டிய காலகட்டம் இது என்பதை உணர்த்துவதாக கூறுகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon