கல்விக்கட்டணத்தை செலுத்த கட்டாயப்படுத்தக்கூடாது

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஊரடங்கு காலத்தில் கட்டணத்தை செலுத்த பொதுமக்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்று தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டிருக்கும் அரசாணையில்கல்லூரிகள் பள்ளிகள் என சில தனியார் கல்வி நிறுவனங்கள் பெற்றோரிடம் கல்வி கட்டணம் கேட்டு வற்புறுத்துவதாக புகார் வந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனவே கடந்த கல்வியாண்டில் நிலுவைத்தொகை வரும் கல்வியாண்டில் கட்டணம் என எதையும் ஊரடங்கு நேரத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடமும் பெற்றோரிடம் கேட்டு வற்புறுத்த வேண்டாம் என்று தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.


Leave a Reply