கொரோனா நிவாரண நிதியாக 1 ரூபாய் வழங்கிய வழக்கறிஞர்களால் அதிர்ச்சி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா நிவாரண நிதியாக சென்னை உயர்நீதி மன்றத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் இரண்டு பேர் தலா ஒரு ரூபாய் வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரொனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிதி திரட்ட தொடங்கியதை அடுத்து நீதிபதி சுப்ரமணியன் இரண்டரை லட்சம் ரூபாய் நிதி வழங்கினார்.

 

அதேபோல வழக்கறிஞர்கள் சிலர் தலா 5 லட்சம் ரூபாய் வழங்கினார். தற்போது வரை 60 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இரண்டு பேர் தலா ஒரு ரூபாயை நிதியாக வழங்கியுள்ளனர். மற்றொரு வழக்கறிஞர் பத்து ரூபாய் வழங்கியுள்ளார்.

 

அவர்களின் உதவும் மனப்பான்மையை பாராட்டி சான்றிதழ் வழங்கப்படும் என்று இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் பிரபாகரன் தெரிவித்திருக்கிறார். அதேநேரத்தில் வழக்கறிஞர்களின் இந்த செயல் நிவாரண நிதி திரட்டுவதை கேலி செய்யும் வகையில் இருப்பதாக பார் கவுன்சில் உறுப்பினர் கனகராஜ் கருத்து கூறியுள்ளார்.

 

சென்னை மெரினா கடற்கரை சாலையில் அழுக்குப் படிந்த கசங்கி ஆடையோடு சுற்றித் திரிந்த மனநலம் பாதித்த நபருக்கு கண்காணிப்பு பணியில் இருந்த மனிதாபிமானமிக்க காவலர்கள் சிலர் புத்தாடை அணிவித்தனர். மேலும் நீண்ட காலமாக வெட்டப்படாமல் இருந்த தலைமுடியை சீர் செய்தனர்.

பெங்களூருவில் நேற்று போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. பெங்களூருவின் கொரொனா காரணமாக 60 பேரை முழுமையாக தனிமைப்படுத்த சுகாதாரத் துறையினர் முடிவு செய்து அவர்களை அழைத்துவர மருத்துவ குழுவினரும் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

 

அப்போது ஏற்கனவே 25 பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தனர். இந்த நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 15 நபர்களையும் அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது அவர்கள் வர மறுத்து காவல்துறையினரிடம் தகராறில் ஈடுபட்டனர்.அப்போது இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.


Leave a Reply