சீனாவுக்கு செக் வைக்க மத்திய அரசு புதிய திட்டம்…என்ன?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


பாகிஸ்தான் வங்கதேசத்திலிருந்து மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு முன் அனுமதி தேவை என்ற விதி இனி எல்லையை ஒட்டிய அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் என மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. பங்குச்சந்தைகள் சரிந்து உள்ள இந்த சூழலை பயன்படுத்தி இந்திய நிறுவனங்களின் பங்குகளை சீன அதிகளவில் வாங்க முற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

 

அண்மையில் எச்டிஎஃப்சி லிமிடெட் இல் சீன வங்கி தனது பங்கின் அளவை அதிகரித்து. இதனால் இந்திய நிறுவனங்களை சீனா மெல்ல தனது மறைமுக கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறதா என்று கேள்வி எழுகிறது. இதனையடுத்து இந்திய சந்தைகளில் சீன முதலீடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க பங்குச்சந்தை ஒழுங்குமுறை நிறுவனமான செர்ஃபீக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

 

இந்நிலையில் நில எல்லையை ஒட்டியுள்ள நாடுகளிலிருந்து முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன் அனுமதி தேவை என விதியை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் சீனாவுக்கு இந்தியா மறைமுக செக் வைத்துள்ளது. எனினும் புதிய விதிமுறைகள் நேபாளம், பூட்டான், மியான்மர் ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.


Leave a Reply