கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களுக்கு மீண்டும் பாதிப்பு…மருத்துவர்கள் திணறல்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தென் கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரொனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருப்பது அந்த நோயை குணப்படுத்துவது குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவில் குணப்படுத்தப்பட்ட 163 பேருக்கு மீண்டும் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

சீனா உள்ளிட்ட வேறு பல நாடுகளிலும் இந்த நிலை உருவாகியுள்ளது. மீண்டும்பாதிக்கப்பட்டவர்கள் அபாயகரமான நிலையில் இல்லாமல் லேசான அறிகுறிகள் உடனேயே இருந்தாலும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது குறித்து முழுமையாக அறியாத நிலையில் குணமடைந்தவர்கள் மீண்டும் பாதிக்கப்படுவது கவலைக்குரியது என்று தென்கொரிய சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

இந்தியாவில் கொரொனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது ஐந்தாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது தமிழக மக்கள் மத்தியில் சற்று ஆறுதலை அளித்துள்ளது. இந்தியாவில் கொரொனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3 ஆயிரத்து 648 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

டெல்லியில் 1,893 பாதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மத்திய பிரதேசத்தில் நேற்று ஒரே நாளில் 92 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து 1, 472 பேருடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. குஜராத்தில் புதிதாக 227 பேருக்கு கொரொனா பாதிக்கப் பட்டதால் 1,377 பேருடன் நான்காவது இடத்தில் உள்ளது.

 

இதுவரை மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகத்தில் நேற்று புதிதாக 49 பேருடன் கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் 1,372 பாதிப்புடன் தமிழகம் ஐந்தாவது இடத்திற்கு பின்தங்கிய சற்று ஆறுதல் அளித்துள்ளது.


Leave a Reply