நாளை முதல் ஊரடங்கில் தளர்வா..? இன்னும் முடிவெடுக்கவில்லை… தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும்..! தமிழக அரசு விளக்கம்!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஊரடங்கு உத்தரவு நாளை முதல் தளர்த்தப்படும் என செய்திகள் வெளியாகும் நிலையில், தமிழக அரசுத் தரப்பில் இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும், உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 2-ம் கட்டமாக மே 3-ந்தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் மோடி அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஏப்ரல் 20-ந் தேதி முதல் ஊரடங்கில் தளர்வு செய்யப்படும் எனவும் அறிவித்திருந்தார். இது தொடர்பாக மத்திய அரசும் 20-ந் தேதி முதல் எந்தெந்த துறைகள் இயங்கலாம் என்ற பட்டியலையும் நேற்று வெளியிட்டுள்ளது.

 

இந்நிலையில், ஊரங்கில் தளர்வு தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இது தொடர்பாக வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கையை சமர்ப்பித்தவுடன் அதனை ஆராய்ந்து தமிழக அரசு ஆணை பிறப்பிக்கும் வரை தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசு கடந்த ஏப்ரல் 15-ந் தேதி வெளியிட்ட ஆணைப்படி, ஏப்ரல் 20-ந் தேதிக்கு பிறகு, எந்தெந்த புதிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனஙகள், இதர சேவைகள் இயங்கலாம் என்பதை பற்றி மாநில அரசுகள் முடிவெடுத்து அறிவிக்க லாம் என தெரிவித்திருந்தன. எனவே இதற்கென மாநில அரசு ஒரு வல்லுநர் குழுவை நியமித்துள்ளது. அந்தக் குழு தன் முதற்கட்ட கூட்டத்தை நடத்தி, அதனுடைய ஆலோசனையை முதல்வரிடம் நாளை (20-ந் தேதி) தெரிவிக்க உள்ளது.

 

இந்த ஆலோசனைகளை முதல்வர் ஆராய்ந்து முடிவெடுக்க உள்ளார். எனவே இது குறித்து தமிழ்நாடு அரசின் ஆணை வெளிவரும் வரை தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


Leave a Reply