கேரளாவில் நாளை முதல் உணவகங்கள் மற்றும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதி
கேரளாவில் நாளை முதல் உணவகங்களை திறப்பதற்கும், டெல்லியை போல் இடது, வலது முறையில் சாலை போக்குவரத்தை அனுமதிக்கவும் கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவின் 14 மாவட்டங்களில் குறைந்தது 7 மாவட்டங்களில் நாளை முதல் இயல்பு வாழ்க்கை திரும்ப உள்ளது.
மத்திய அரசிடம் கேரள அரசு அளித்துள்ள பரிந்துரையில் கேரளாவை நான்கு மண்டலங்களாக பிரித்து விடும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவப்பு மண்டலம் பாதிப்பு அதிகம் என்று, ஆரஞ்சு ஏ, ஆரஞ்சு பி என பாதிப்பு படரக் கூடிய இடம் படர வாய்ப்பில்லாத இடம் என்றும் எந்தவித பாதிப்பும் இல்லாத பகுதி பச்சை என்றும் அடையாளப்படுத்தப்படுகிறது.
இந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால் ஊரடங்கு தளர்வை கேரள அரசு நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ளது. கடந்த 8 நாட்களாக கேரளாவில் பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் உள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
மே மாதம் மூன்றாம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அதன் பிறகே ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து குறித்து மத்திய அரசு முடிவெடுக்க உள்ளது. ஊரடங்கு தளர்வுகளுக்காக மத்திய அரசு தயாராகி வரும் சூழலில் ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சரவை குழு விமான போக்குவரத்து குறித்து நேற்று ஆலோசனை நடத்தியது.

பாதுகாப்பான பகுதிகளுக்கு மட்டும் உள்நாட்டு விமான சேவையை தொடங்கலாம் என்று அப்போது முடிவு செய்யப்பட்டது. இறுதி முடிவை பிரதமர் மோடி எடுப்பார் என்றும் அதிகாரம் மோடிக்கு வழங்கப்பட்டது. மாநிலங்கள் தோறும் ஏற்பட்ட பாதிப்பு குணமடைந்து ஒரு சதவீதம் இறப்பு விகிதம் போன்ற விபரங்களின் அடிப்படையில் பிரதமர் மோடி முடிவு எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் நடுத்தர ஏழை மக்கள் போக்குவரத்திற்கான ரயில் மற்றும் பேருந்து சேவைகள் குறித்து மத்திய அரசு இதுவரை முடிவெடுக்கவில்லை. மாநிலங்களை விட்டு மாநிலங்களுக்கு பயணத்தை அனுமதித்தால் அது விளைவை மிகவும் அதிகப்படுத்தி விடும் என்றுதான் அமைச்சர்கள் குழு பிரதமருக்கு பரிந்துரை செய்துள்ளது.






