நெஞ்சுவலியால் இறந்துப்போன முதியவருக்கு… கொரொனா பாசிடிவ்!
சென்னையில் நெஞ்சுவலியால் இறந்து போன சுதந்திர போராட்ட தியாகிக்கு கொரொனா தொற்று இருந்தது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு அந்த சிந்தாதரிப்பேட்டை சேர்ந்த ஒருவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கொரொனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
ஆனால் இவரது தந்தையும் விடுதலைப் போராட்ட தியாகியுமான 96 வயது முதியவர் கடந்த 13ஆம் தேதி நெஞ்சுவலிநெஞ்சு வலிக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காய்ச்சலும் இருந்ததால் கொரொனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் உயிரிழந்த முதியவருக்கு கொரொனா தொற்றிருந்தது பரிசோதனை முடிவில் உறுதிப்படுத்தப்பட்டு அறிக்கை வந்துள்ளது. இதையடுத்து அவர் வாசித்த வேதகிரி வேதகிரி தெருவும், கலவை தெருவும் சீல் வைக்கப்பட்டன. அடக்கம் செய்ய கொண்டு சென்ற 4 பேர் முதியவரின் வீட்டில் வாடகைக்கு வசிக்கும் 7 பேர் அவரது மகன், பேரன் ஆகியோர் தனியே கொடுக்கப்பட்டுள்ளன.






