இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை எட்டுகிறது..! 6 மாநிலங்களில் ஆயிரத்தை கடந்தது..! பலியும் 486 ஆனது!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. உயிரிழப்பும் 486 ஆக அதிகரித்துள்ளது. 6 மாநிலங்களில் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது.

 

கொரோனா தொற்றுக்கு உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கையும் , பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இது வரை 22,50,790 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 லட்சம் பேர் வரை குணமான நிலையில் உயிரிழப்பு நேற்று ஒரே நாளில் 7500-க்கும் மேல் உயர்ந்து 1,54,266 என அதிகரித்துள்ளது. இதில் அமெரிக்கா நிலைமை தான் மிகவும் மோசமாகி வருகிறது. அங்கு நேற்று மட்டும் 4500-க்கும் மேற்பட்டோரை கொரோனா காவு வாங்கிய நிலையில் மொத்த உயிரிழப்பு 37,158 ஆக உயர்ந்துள்ளது.

 

அமெரிக்கா தவிர்த்து பெரும்பான்மை ஐரோப்பிய நாடுகளில் தான் கொரோனா கொலை வெறித்தாண்டவமாடி வருகிறது. இத்தாலி (22,745), ஸ்பெயின் (20,002 ), பிரான்ஸ் (18,681), பிரிட்டன் (14,576) ஆகிய நாடுகளில் 10 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், ஜெர்மனி, ஹாலந்து, பெல்ஜியம், சுவிஸ், டென்மார்க், ஸ்வீடன் ஆகிய நாடுகளில் இப்போது வைரஸ் தொற்று வேகம் எடுத்துள்ளது.

 

இந்தியாவிலும், தினமும் சராசரியாக 1000 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு அதிகரித்து | 4,352 ஆக உயர்ந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 486 ஆக உயர்ந்து 500 ஐ நெருங்கியுள்ளது. இதில் இந்தியாவில் 6 மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிக பட்சமாக மகாராஷ்டிரத்தில் 3,323 பேருக்கும், டெல்லியில் 1,707, தமிழகத்தில் 1,323, ராஜஸ்தானில் 1,229, ம.பி.யின் 1,310, குஜராத்தில்1,021 என பாதிப்பு அதிகரித்துள்ளது.

 

இதற்கிடையே இந்தியாவில் மே மாதம் முதல் வாரம் முதல் 15 நாட்களுக்கு கொரோனா பாதிப்பு மிக உச்சத்தில் பேயாட்டமாக இருக்கும் என்றும் மே 3-வது வாரத்தில் இருந்து படிப்படியாக குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் பாதிப்பு அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply