குகையில் பதுங்கி இருந்த சீன இளைஞர்…காரணம் என்ன? பரபரப்பு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


திருவண்ணாமலையில் பதுங்கியிருந்த சீன வாலிபருக்கு கொரொனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கிரிவல மலையில் உள்ள ஒரு குகையில் சீனாவை சேர்ந்த இளைஞர் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவரை கைது செய்த காவல்துறையினர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரொனா பரிசோதனைக்காக அனுமதித்தனர்.

 

அதில் அவருக்கு கொரொனா நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஓரளவு காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

மதுரையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் மதுரை மற்றும் விருதுநகரை சேர்ந்த 61 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் 7 பேர் கொரொனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 

குணமடைந்து வீடுகளுக்கு செல்பவருக்கு பொன்னாடை கொடுத்தும் பழங்கள் கொடுத்தும் மருத்துவர்கள் வழியனுப்பி வைத்தனர். அவர்கள் தங்கள் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் ஏற்கனவே 15 பேர் கொரொனாவிற்கு சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர்.


Leave a Reply