தமிழகத்தில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனை தொடங்கியது..! சேலத்தில் 18 பேரிடம் நடத்திய சோதனையில் ஒருவருக்கும் கொரோனா அறிகுறி இல்லை!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரோனா அறிகுறியை துரிதமாக கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் பரிசோதனை நடத்துவது தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம் நகரங்களில் இன்று தொடங்கியது. சேலத்தில் 18 பேரிடம் நடத்தப்பட்ட சோதனை முடிவுகள் 30 நிமிடங்களில் வெளியானது. இதில் ஒருவருக்கும் கொரோனா தொற்று அறிகுறி இல்லை என்ற ரிசல்ட் வெளியானது.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இது வரை 1323 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, 15 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

ரொரோனா பரவலை கட்டுப்படுத்த, பரிசோதனைகளை அதிகப்படுத்துவதும், துரிதப்படுத்துவமே முக்கியம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதற்கான கருவிகள் இல்லாததால், பிசிஆர் கருவிகள் மூலம் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இதுவரை பரிசோதனை நடத்தப் பட்டு வந்தது. இதனால் சோதனைகளை துரிதப்படுத்த சீனாவில் இருந்து மொத்தம் 70 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்களை இறக்குமதி செய்ய தமிழகம் மட்டுமின்றி மத்திய அரசும் ஆர்டர் செய்திருந்தன. ஆனால் இந்தக் கருவிகள் இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டது. 2 நாட்களுக்கு முன்னர் 5 லட்சம் கிட்கள் மட்டுமே இந்தியா வந்தன.

 

இதில் 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் தமிழகம் வந்து சேர்ந்த நிலையில், முதற் கட்டமாக சென்னை, கோவை, சேலம் ஆகிய நகரங்களில் இன்று முதல் பரிசோதனைகள் தொடங்கியுள்ளன.இந்த ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி உள்ளதா என்பதை 15 முதல் 30 நிமிடங்களுக்குள் கண்டறிய முடியும் என்பதால், இன்று முதல் கூடுதல் நபர்களிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

 

இன்று சேலம் அரசு மருத்துவமனையில் 18 பேருக்கு ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. முடிவுகளும் 30 நிமிடங்களில் வெளியான நிலையில், ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டது.


Leave a Reply