75 வயதில் உடற்பயிற்சி செய்து கலக்கும் உகாண்டா அதிபர்…!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் உடற்பயிற்சி செய்தும் பாட்டு பாடியும் மக்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். 75 வயதான உகாண்டா அதிபர் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வீட்டினுள் இருக்கும் மக்கள் குறுகிய இடத்தில் எவ்வாறு உடற்பயிற்சி செய்து உடல் நலனைப் பேண வேண்டும் என்று அவர் அந்த வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார். உடற்பயிற்சிக்காக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதைக் கண்ட நிலையில் தனது அலுவலகத்திலேயே உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிடுவதாக அவர் டுவிட்டரில் கூறியுள்ளார்.

 

கொரொனா பரவலைத் தடுக்க அவசரகால நிலை அமல்படுத்தப்பட்டு இருக்கும் லைபீரியாவில் அதிபர் ஜார்ஜ் பாட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரொனாவுக்கு எதிரான யுத்தத்தில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அந்த பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன. அதிபர் ஜார்ஜே பாடலையும் பாடியுள்ளார்.


Leave a Reply