கொரொனாவை வென்று வரும் கேரளா…!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


நாடெங்கும் கொரொனாவுக்கு எதிராக பெரும் யுத்தம் நடந்து கொண்டிருக்கையில் கேரளாவிலிருந்து நம்பிக்கையளிக்கும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அங்கு மேலும் தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரொனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையை விட குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

 

நேற்று 3 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டதாகவும், அதேசமயம் நேற்று ஒரே நாளில் மட்டும் 19 பேர் குணம் அடைந்து இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது. தங்கள் மாநில மக்களின் ஒத்துழைப்பை இதற்கு காரணம் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

 

வளைகுடா நாடுகளில் சிக்கியிருக்கும் தங்கள் மாநிலத்தில் சேர்ந்தவர்களை மீட்க சிறப்பு விமானத்தை இயக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரொனா அச்சுறுத்தல்களுக்கு நடுவே வீடுகளுக்கு பால் வினியோகம் செய்து வரும் முதியவர்களுக்கு பாதுகாப்ப உபகரணங்கள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரூபாய் நோட்டுகளிலும், காகிதங்களில் பரவலாம் என்ற அச்சம் இருக்கும் நிலையில் பால் பாக்கெட்டுகளை வெந்நீரில் கழுவிய பின்னரே வீடுகளில் உபயோகிக்கின்றனர்.

 

இதனால் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக சுகாதாரப் பணியாளர்களை போன்று தங்களுக்கும் கைவசம் வழங்க வேண்டுமென்று வீடுகளில் பால் வினியோகம் செய்ய முதியவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply