ஊரடங்கை மீறியதால் 500 முறை ‘I am sorry’ எழுதிய வெளிநாட்டினர்!

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் பொதுவெளியில் சுற்றித்திரிந்த வெளிநாட்டினருக்கு காவலர்கள் நூதன தண்டனை வழங்கினர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் கங்கைநதி அறிக்கையை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 10 பேர் சுற்றி திரிந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை செய்தனர். மேலும் நான் ஊரடங்கு விதிகளை பின்பற்றவில்லை என்னை மன்னிக்கவும் என்று 500 முறை எழுதச்சொல்லி நூதன தண்டனையை வழங்கினர்.

 

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை கண்காணிக்க காஞ்சிபுரத்தில் சிறுசிறு தெருக்களில் மோட்டார் சைக்கிள் ரோந்து பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை மூலம் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் அமைக்கப்பட்டு இதுவரை சுமார் 3400 வாகனங்கள் பறிமுதல் செய்தும் பொது மக்களின் நடமாட்டம் குறைந்தபாடில்லை.

 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நகரத்தில் உள்ள 55 வார்டுகளில் உள்ள தெருக்களில் சோதனை செய்வதற்காக இருசக்கர வாகன ரோந்து என்ற பிரிவை உருவாக்கினார். அதன்படி சிறுசிறு தெருக்கள் மற்றும் சாலைகளில் மக்கள் நடமாட்டம் உள்ளதால் கண்காணிக்கவும் கொரொனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மோட்டார் சைக்கிள் கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டனர்.


Leave a Reply