5 கிலோ எடை சிலிண்டர்கள் பயன்படுத்துவோருக்கு 8 சிலிண்டர்கள் இலவசம்..?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு உபயோகிப்போர் 8 சிலிண்டர்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டில் உள்ள சுமார் 8 கோடி ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் பிரதமரின் திட்டத்தின் கீழ் மூன்று மாதத்திற்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

 

பொதுவாக வீடுகளில் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தபடுகிறது. பிரதமரின் இலவச எரிவாயு இணைப்பு பெற்ற குடும்பங்கள் 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இலவச சமையல் எரிவாயு பெறுவதில் குழப்பம் ஏற்பட்டது.

 

இந்த நிலையில் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரை பயன்படுத்துவோர் 3 சிலிண்டர்களையும், 5 கிலோ எடைகொண்ட சிலிண்டரை பயன்படுத்துவோர் 8 சிலிண்டர் களையும் இலவசமாக பெறலாம் என மத்திய எண்ணெய் அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Leave a Reply