ஊரடங்கை மீறி ட்ரோன் மூலம் பான்மசாலா சப்ளை

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


குஜராத்தில் டிரோன் மூலம் வீடுகளுக்கு பான்மசாலா சப்ளை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். கொரொனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. குஜராத்தில் ஊரடங்கு பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதனை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் குஜராத்தில் மோருக் மாவட்டத்தில் சில இடங்களில் டிரோன் மூலம் வீடுகளுக்கு பான் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து போலீசார் 2 பேரை கைது செய்தனர்.


Leave a Reply