நியூயார்க்கில் மக்கள் தொகை அதிகமாக உள்ளதே கொரொனா பரவ காரணம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளை விட நியூயார்க் நகரில் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அமெரிக்காவின் நிதி நகரமாக இருக்கும் நியூயார்க் கொரொனா நகரமாக மாற காரணம் என்ன?

 

எப்போதும் பரபரப்பாக காணப்படும் நியூயார்க் நகர சாலைகள் இப்போது அமைதியாக காணப்படுகின்றன. ஆட்கொல்லி வைரஸ் உலகின் மிகப்பெரிய வர்த்தக நகரையே ஆட்டம் காண வைத்துள்ளது. அமெரிக்காவில் 5 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நியூயார்க்கில் சேர்ந்தவர்கள்.

 

அதாவது இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளை விட நியூயார்க்கில் அதிகமானவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கொரொனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது. அமெரிக்காவில் கொரொனாவால் உயிரிழப்பவர்களின் 53% பேர் நியூயார்க்கை சேர்ந்தவர்கள். இங்கு உள்ள சபோனின் சிஸ்டர் பகுதிகளில்தான் 93 சதவித தோற்று பதிவாகியுள்ளது. குழந்தை இறப்பு விகிதம் 6 சதவீதமாக உள்ளது.

 

நியூயார்க் மக்கள் அடர்த்தி மிகுந்த மாகாணம் இது. மக்கள் தொகை 84 லட்சம். அதாவது ஒரு சதுர மைலுக்கு 27 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இதுவே கொரொனா இங்கு வேகமாக பரவ முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மற்றொன்று நியூயார்க்கின் பொதுப்போக்குவரத்து கட்டமைப்பு, நாளொன்றுக்கு 54 லட்சம் பேர் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

 

அமெரிக்காவின் மற்ற நகரங்களை விட இவர்கள் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகம் பல்வேறு நாடுகளிலிருந்து இங்கு சுற்றுலாவுக்காக ஆண்டுக்கு 6 கோடி பேர் வருகை தருகின்றனர். அப்படி ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தவர்களால் தான் கொரொனா பரவியதாகச் சொல்லப்படுகிறது. நியூயார்க்கின் சுகாதார கட்டமைப்பும் மற்றொரு காரணமாக கூறப்படுகிறது. ஏழைமக்கள் கொரொனா பரிசோதனைக்கான கட்டணத்தை செலுத்த இயலாது என்பதால் சோதனை செய்ய அவர்கள் முன்வரவில்லை என சொல்லப்படுகிறது.

 

அது தவிர தனியார் பரிசோதனை மையங்கள் மற்றும் அரசு இடையே முறையான தகவல் பரிமாற்றம் இல்லாமல் போனதும் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய இயலாமல் போனதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. முறையாக திட்டமிட்டு முன்கூட்டியே பயணத்தடை நடைமுறைப்படுத்துவது கொரொனாவை மக்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளாதது உள்ளிட்டவற்றின் விளைவுகளையே நியூயார்க் மக்கள் தற்போது அனுபவிக்கின்றனர்.

 

ஒரு நோய்த்தொற்றை எப்படி அணுக கூடாது என்பதற்கான உதாரணமாக மாறியுள்ளது உலகின் மிகப்பெரிய வர்த்தக நகரமான நியூயார்க்.


Leave a Reply