கொரொனா பரவலால் சவுதியில் காலவரையற்ற ஊரடங்கு..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா தொடர் அச்சுறுத்தல் காரணமாக சவுதி அரேபியாவில் காலவரையற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த நான்கு நாட்களில் சுமார் 300 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் நாட்டில் கொரொனா பாதிப்பு நான்காயிரத்தை கடந்துள்ளதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

இதனைத்தொடர்ந்து கொரொனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை காலவரையின்றி நீக்கப்படுவதாக சவுதி மன்னர் சல்மான் அறிவித்துள்ளார்.. சவுதியில் இதுவரை 4 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 59 பேர் பலியாகியுள்ளனர். வளைகுடா நாடுகளில் சவுதியில் தான் கொரொனா பாதிப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply