பீகாரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 23 பேருக்கு கொரோனா..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


பீகாரில் கொரொனா பாதித்த 60 பேரில் 23 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓமன் நாட்டிலிருந்து சிவான் மாவட்டம் பஞ்சவார் கிராமத்திற்கு கடந்த மாதம் திரும்பி வந்த நபருக்கு கடந்த நான்காம் தேதி கொரொனா உறுதியானது. பாதிப்பு உறுதி செய்யப்படும் முன்பு சிவான் மாவட்டத்தில் உள்ள உறவினர்கள் வீடு இருக்கும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு அவர் சென்று வந்துள்ளார்.

 

இதனால் உறவினர்கள் 22 பேருக்கும் அவரது சொந்த கிராமமான பஞ்சவாரை சேர்ந்த இரண்டு பேருக்கும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களையும் சேர்த்து தான் மாவட்டத்தில் மட்டும் 31 பேருக்கு கொரொனா உறுதியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து சிவான் மாவட்ட எல்லைப் பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.


Leave a Reply