கொரோனா.ஊரடங்கு உத்தரவு : ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீசார் கெடுபிடி!!

Publish by: கே. மகேந்திரன் --- Photo :


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 2 வாரங்களை கடந்து விட்ட நிலையில்,இராமநாதபுரத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப் பட்டுள்ளது. தடையை மீறு வாகனங்களில் ஊர் சுற்றுவோர் மீது போலீசார் கடும் கெடுபிடி செய்வதுடன் வழக்குப்பதிவு செய்து வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

 

ஊரடங்கை முன்னிட்டு ராமநாதபுரத்தில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இரு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்களில் அவசியமின்றி ஊர் சுற்றினால் போலீசார் அபராதம் விதித்தும், பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

 

இந்த ஊரடங்கு காலத்தில் இதுவரை விதிமீறல் தொடர்பாக 1,088 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், 1352 வாகனங்கள் பறிமுதலும் செய்யப்பட்டுள்ளது அத்தியாவசிய பணிக்கு செல்லும் கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறையிடம் விண்ணப்பித்து அனுமதி சீட்டு பெற வேண்டும். அவ்வாறு அனுமதி சீட்டு இல்லாமல் இயக்கப்படும் அனைத்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்து வருகின்றனர்.


Leave a Reply