ட்ரோன் கேமராவை பார்த்து தெறித்த தாயம் விளையாடிய பாய்ஸ்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


காஞ்சிபுரம் கொரொனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் போலீசார் டிரோன் கேமேரா மூலம் கண்காணித்தபோது சாலைகள் கும்பலாக தாயம் விளையாடியவர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

கொரொனா பாதிக்கப்பட்டவர் வசித்து வந்த பகுதியை கட்டுப்பாடு மண்டலமாக அறிவிக்கப்பட்டு 65 தெருக்கள், இரும்பு தகரத்தால் சீல் வைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மக்கள் தடுப்பு வேலியைத் தாண்டி வருவதும் வெளிநபர்கள் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு போலீசார் டிரோன் கேமரா மூலம் கண்காணித்தபோது சிக்கிய காட்சிகள் வெளியாகியது.

 

அவர்கள் எந்தெந்த வீடுகளை சேர்ந்தவர்கள் என அறியும் வரை அனைவரையும் கேமரா விரட்டி சென்றது.


Leave a Reply