“சரக்கு” கிடைக்காத விரக்தியில் மாற்று போதையை நாடும் “குடிமகன்கள்!!” தூக்க மாத்திரை சாப்பிட்ட மனோரமா மகன் பூபதி மருத்துவமனையில் அனுமதி!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால் மது கிடைக்காத விரக்தியில் அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்ட நடிகை ஆச்சி மனோரமாவின் மகன் பூபதி, உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

ஊரடங்கு உத்தரவால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் ஒட்டு மொத்தமாக அடைக்கப்பட்டுள்ளன. இதனால் குடிமகன்களின் பாடுதான் படு திண்டாட்டமாகியுள்ளது. போதை ஏத்த முடியாமல் பைத்தியம் பிடித்தது போல் அல்லாடுகிறார்கள். சரக்கு கிடைக்காத நிலையில் போதைக்கு மாற்றாக என்னென்னவோ புது யுக்திகளை கையாண்டு தங்கள் உயிரை வம்படியாக பலி கொடுத்து வரும் பகீர் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன.

 

புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 3 பேர், ஷேவிங் லோஷனை குளிர்பானத்தில் கலந்து குடிக்க, கொஞ்ச நேரத்தில் 3 பேரின் உயிரும் பறிபோனது.செங்கல்பட்டிலோ வார்னிஷ் குடித்த 3 ரயில்வே தொழிலாளர்களும் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியது. அண்டை மாநிலமான கேரளாவிலோ, மது கிடைக்காத ஏக்கத்தில் தற்கொலை சாவுகள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தின் புதுக்கோட்டையில் லாரி டிரைவர் ஒருவர் தூக்குப் போட்டமும் நடந்தேறியது.

 

இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடுவது போல் சென்னையை அடுத்த பட்டாபிராமில், இளைஞர் ஒருவர் நேற்று அரங்கேற்றிய கூத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சரக்கு கிடைக்காத விரக்தியில் வீட்டருகே இருந்த கிணற்றுக்குள் இறங்கி, சரக்கு வேணும் என தர்ணா போராட்டமே நடத்தினார். கடைசியில் தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டனர்.

 

இந்நிலையில், பிரபல நகைச்சுவை நடிகையான மறைந்த ஆச்சி மனோரமாவின் மகன் பூபதி, மது கிடைக்காததால் போதைக்காக அதிக தூக்க மாத்திரைகளை விழுங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தி.நகரில் வசிக்கும் பூபதி, ஓரிரு திரைப்படங்களில் தலை காட்டியவர். அதன் பின் போதைக்கு அடிமையாகி எந்நேரமும் புல் மப்பு தான் வாழ்க்கை என்று இருந்து வந்தார்.

 

இப்போது ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களிலும் மதுபான பார்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் சரக்கு கிடைக்காத விரக்தியில் அதிக அளவு தூக்க மாத்திரையை சாப்பிட்ட பூபதி, இன்று காலையில் வீட்டில் மயங்கிக் கிடந்துள்ளார். இதனால் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

 

இதற்கிடையே, டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் உ0 ஆண்டுகளாக ஒழிக்கப்பட்டிருந்த கள்ளச்சாராயம், மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பகீர் கிளப்புகிறது.வேலூர், திருவண்ணாமலை, மதுரை, தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கள்ளச்சாராய பேர்வழிகள் மீண்டும் தொழிலை ஆரம்பித்துள்ளதால், கள்ளச்சாராயத்தை நோக்கி குடிமகன்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.


Leave a Reply