தொற்று பரவும் அச்சத்தால் இறந்தவர்களின் உடலை சாலையில் வீசி செல்லும் அவலம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தென்னமெரிக்க நாடான ஈக்வடாரில் கொரொனா தொற்றினால் இறந்தவர்களின் உடலை தெருக்களில் வீசி செல்லும் அவலம் நடைபெற்றுள்ளது. கொரொனா தொற்றினால் உலகம் முழுவதும் 81,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் 172 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதன் காரணமாக இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு போதிய மரப்பட்டைகள் கிடைக்காத காரணத்தினால் அட்டை பெட்டிகளில் உடல்களை வைத்து அடக்கம் செய்து வருகின்றனர். மேலும் தொற்று நோய் பயம் காரணமாக இறந்தவர்களின் உடலை சாலையில் வீசி செல்லும் வீடியோவும் வெளியாகியுள்ளது. இதனை இணையத்தில் கண்டவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Leave a Reply