மகாராஷ்டிராவில் 60 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனாவால் அதிகமாக உயிரிழப்பு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரொனாவுக்கு உயிரிழப்போரின் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை அதிகம் என்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டின் கொரொனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடம் வகிப்பது மகாராஷ்டிரா. அங்கு மத்திய அரசு ஏழாம் தேதி வெளியிட்ட தகவலின்படி 768 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

 

48 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான புள்ளி விவரத்தின் படி 21 வயதிலிருந்து 30 வயது வரையிலான இளைஞர்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். அந்த வயது உடையவர்களில் மொத்தம் 157 பேர் பாதிக்கப்பட்டு இருந்தாலும் யாரும் உயிரிழக்கவில்லை. 31 வயதில் இருந்து 40 உடையவர்களில் 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

41 முதல் 50 வயது வரை உள்ளவர்களில் 146 பேர் பாதிக்கப்பட்டுள்ளன நிலையில் அதில் ஐந்து பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். 51 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 107 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும் அதில் 11 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 61 வயதில் இருந்து 70 வயது வரை உள்ள முதியவர்களில் 84 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

 

அவர்களில் தான் அதிகமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர். 71 வயதிலிருந்து 80 வயது உள்ளவரை உள்ளவர்களில் 28 பேர் பாதிக்கப்பட்டு எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இறப்பு விகிதத்தில் 28.5 7% ஆகும். 81 வயதிலிருந்து 90 வயது வரை உடைய முதியவர்களில் 10 பேர் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.


Leave a Reply