தமிழ்நாட்டில் 3 டாக்டர்களுக்கு கொரோனா?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தமிழ்நாட்டில் இதுவரை கொரொனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள 690 பேரில் மூன்று பேர் மருத்துவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த மூன்று மருத்துவர்களில் ஒருவரான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் என்றும் கூறப்படுகிறது. இரண்டு மருத்துவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் என்று இதில் ஆண் மருத்துவர் அன்மையில் டெல்லி சென்று வந்த நிலையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

 

அவரை தொடர்ந்து மருத்துவராகப் பணியாற்றும் அவரது மனைவியும் கொரொனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Reply