வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த 45 வயதான வியாபாரி கொரொனாவால் உயிரிழப்பு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


உலக அளவில் கொரொனா உயிரிழப்பு 82 ஆயிரத்தை கடந்து இருக்கும் நிலையில் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 966 பேர் உயிரிழந்திருக்கின்றனர். கொரொனாவின் கோரப்பிடியில் சிக்கி உலக நாடுகள் சின்னாபின்னமாகி வருகின்றன. வல்லரசு நாடான அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது.

 

21,000 பேர் குணமடைந்த நிலையில், உயிரிழப்பு 12,837 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 33 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் உயிரிழந்தனர். ஸ்பெயினில் ஏற்பட்ட உயிரிழப்பு 14 ஆயிரத்து கடந்துள்ளது. இத்தாலியில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 16,127 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

 

கொரொனா பிடி பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் கடந்த சில நாட்களாக ஐந்தாவது இடத்தில் இருந்த பிரான்ஸ் ஒரே நாளில் 11 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டதால் நான்காவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி தொடர்ந்து பிரான்சிலும் உயிரிழப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது. ஜெர்மனியில் பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்த போதும் உயிரிழப்பு இரண்டாயிரம் ஆகவே உள்ளது.

 

பிரிட்டனில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தை தாண்டிய போதும், குணமடைந்தோர் எண்ணிக்கை கடந்த மூன்று நாட்களாகவே 150ஐ தாண்டவில்லை. கொரொனா வைரஸ் பாதிப்பிற்கு மேலும் இருவர் வேலூரில் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. வேலூர் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த 45 வயதான வியாபாரி ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

 

இவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்ட நிலையில் இருப்பது இவருக்கு கொரொனா இருப்பது உறுதியானது. இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலை உயிரிழந்தார். அரசு விதிகளின்படி இவரது உடலை எரியூட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விசாரணையில் இவர் டெல்லி மாநாட்டிற்கு அல்லது வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

 

இதனால் தமிழகத்தில் சமூக தொற்று இருக்குமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.உயிரிழந்தோர் எண்ணிக்கை யும் தமிழ்நாட்டில் 8 ஆக அதிகரித்துள்ளது.


Leave a Reply