34 லட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் இலவசமாக வழங்கிய இந்திய வம்சாவளி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


அமெரிக்காவில் கொரொனா சூறாவளி வீசும் நிலையில் அதன் சிகிச்சைக்காக நியூயார்க் மற்றும் லூசியானா மாநிலங்களுக்கு 34 லட்சம் ஹைட்ராக்ஸிக் கிலோராக்குவின் சல்ஃபேட் மாத்திரைகளை இலவசமாக வழங்க இந்திய வம்சாவளி இருந்து நிறுவனம் முன்வந்துள்ளது.

 

அமெரிக்காவில் கொரொனா தோற்று எண்ணிக்கை 4 லட்சத்தை நோக்கியும், இறப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தை நோக்கி வேகமாக செல்கிறது. இந்த நிலையில் கொரொனா சிகிச்சைக்கு உதவிகரமாக இருக்கும் என அதிபர் கூறும் ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மாத்திரைகளை இலவசமாக வழங்க நியூஜெர்சியில் இந்தியர்களான சிராக் மற்றும் சிந்து பட்டேல் நடத்தும் ஃபார்மசீயூடிகல் நிறுவனம் முன்வந்துள்ளது.

 

இதற்காக அதன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு இந்த மாத மத்தியில் சுமார் 2 கோடி மாத்திரைகளை தயாரிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.


Leave a Reply