--- --:--:-- --

மக்கள் கூட்டமின்றி அனுசரிக்கப்பட்ட குருத்தோலை ஞாயிறு!

13

வரலாற்றில் முதன்முறையாக வாடிகனில் மக்கள் கூட்டம் இன்றி நேற்று குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தவக் காலத்தின் கடைசி வாரத்தில் முதல் ஞாயிறு குருத்தோலை வாயிலாக கடைபிடிப்பது வழக்கம்.

 

குருத்தோலையை பிடித்தபடி கிறிஸ்தவர்கள் பாடல் பாடிக் கொண்டு ஊர்வலமாக செல்வதும், பின்னர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம் ஆகி கிறிஸ்தவம் பரவி இருக்கின்ற எல்லா நாடுகளிலும்குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது.

 

வெவ்வேறு நாடுகளில் சில சிறப்பு பழக்கங்களும் நடைமுறையில் உள்ளன. உலகம் முழுவதும் கொரொனா தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் அனைத்து விதமான மத வழிபாடுகளுக்கு தற்போது தடை ஏற்பட்டுள்ளது.

 

இந்த ஆண்டு கொரொனா அச்சுறுத்தலால் வாடிகன் நகரத்தில் நிபந்தனைகளுடன் வழிபாடு நடத்தப்பட்டது. அதில் போப் பிரான்சிஸ் வழிபாடு நடத்த ஏராளமான மக்கள் இணையத்தின் வாயிலாக இணைந்து வழிபாடு நடத்தினார். இது வரலாற்றின் முதன்முறை என்று வாட்டிகன் சபை தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon