கொரொனாவால் 2 லட்சத்துக்கும் மேலானவர்கள் மீண்டுள்ளனர்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


உலகம் முழுவதும் கொரொனா வைரஸில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 71 ஆயிரத்து 867 ஆக உயர்ந்துள்ளது உலக நாட்டு மக்களிடையே சற்று நிம்மதி தரும் செய்தியாக உள்ளது. உலக அளவில் கொரொனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்து 85 ஆயிரத்து 285 ஆக இருக்கிறது. இதில் 2 லட்சத்து 71 ஆயிரத்து 867 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 

லேசான வைரஸ் தாக்குதலுடன் 8 லட்சத்து 97 ஆயிரத்து 650 பேரும் தீவிர சிகிச்சையில் 46 ஆயிரத்து ஐந்து பேரும் உள்ளனர். உலகம் முழுவதும் கொரொனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 344 ஆக உள்ளது.


Leave a Reply